- கோயம்புத்தூர்
- அபுதாபி
- இண்டிகோ
- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
- கோவை சர்வதேச விமான நிலையம்
- சர்வதேச
கோவை: கோவையில் இருந்து சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில், இன்டிகோ விமான நிறுவனம் அபுதாபிக்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையம் இடையே வாரத்தில் மூன்று முறை விமானங்களை இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அட்டவணையின்படி காலை 7.30 மணிக்கு கோவையில் புறப்படும் இண்டிகோ விமானம் பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சேவை கோவையில் இருந்து அபுதாபிக்கு ஆகஸ்ட்.10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. துபாய், சிங்கப்பூருக்கு மட்டுமே இதுவரை சர்வதேச விமான சேவை இருந்த நிலையில் அபுதாபிக்கு சேவை ஆரம்பம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய பாதைகளின் அறிமுகம், இன்டிகோவின் சர்வதேச வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸு க்கும் இடையேயான விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் பிரதிபலிக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய விமான மையமாக கோவையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் இது குறிக்கிறது.
The post கோவையில் இருந்து அபுதாபிக்கு ஆகஸ்ட்.10-ம் தேதி முதல் விமான -சேவை தொடக்கம்: இண்டிகோ நிறுவனம் appeared first on Dinakaran.