×

இங்கிலாந்து -வெஸ்ட்இண்டீஸ் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்

நாட்டிங்காம்: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட்தொடரில் ஆடி வருகிறது. இதில் லாட்ர்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நாளை தொடங்குகிறது.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக மார்க்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சொந்தமண்ணில் வலுவான இங்கிலாந்துக்கு அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் சவால் கொடுத்துஇன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்க்குமா என்றஎதிர்பார்ப்பு உள்ளது.

The post இங்கிலாந்து -வெஸ்ட்இண்டீஸ் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : England-West Indies 2nd Test ,Nottingham ,West Indies ,England ,Lauders ,Test ,Dinakaran ,
× RELATED 3வது டி.20 போட்டியில் 8 விக்கெட்...