×

அசாமில் பிரம்மபுத்திரா வெள்ளத்தில் வீடு இழந்து தவிக்கும் மக்கள்: இதுவரை 96 பேர் பலி

அசாம்: அசாம் மாநிலத்தில் மழை வெள்ளப்பாதிப்புகள் குறைந்துள்ள போதிலும் பிரம்மபுத்திரா நதி வெள்ளத்தில் 100 கணக்கான வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் மொரிகா மாவட்ட மக்கள் வீடு இழந்து சாலைகளில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மே 30ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் அசாம் மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

இந்நிலையில் மழை ஓய்ந்து பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் வடியத்தொடங்கி இரு வரன்கள் ஆனபோதும் மொரிகா மாவட்ட மக்களின் கண்ணீர் வடியாத சூழலே நிலவி வருகிறது. பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 100கணக்கானோர் வீடு இழந்து சாலைகளில் பாலங்களில், உயரமான நிலப்பரப்புகளில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு பெரு வெள்ளத்தின் சீற்றத்தில் நில அரிப்பு ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய முதல் மழை வெள்ள பாதிப்புகளுக்கு 96 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 17 மாவட்டங்களில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மணிலா அரசு தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விலை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ரப்தி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 48 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் உற்பத்தி ஆகும் ரப்தி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாயகரத்தை தாண்டி ஒரு மீட்டருக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் ஆனால் ஆற்றின் கரையோர பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதால் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ரப்தி ஆறு சேரும் சரயு ஆற்றில் வெள்ளம் வடிந்து வருவதால் விரைவில் நிலைமை சீரடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post அசாமில் பிரம்மபுத்திரா வெள்ளத்தில் வீடு இழந்து தவிக்கும் மக்கள்: இதுவரை 96 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Brahmaputra ,Assam ,Morica ,Brahmaputra River ,Southwest ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம்...