×
Saravana Stores

2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது; ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் பலத்த குளிர் காற்று: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


ஏலகிரி: ஏழைகளின் ஊட்டியான ஏலகிரிமலையில் பலத்த குளிர் காற்றுடன் 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1,720 மீட்டர் அடி உயரத்தில் உள்ளதால், எப்போதும் குளிர்ந்த சீதோஷண நிலை காணப்படுவதால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சராசரியாக 1000 முதல் 1500 பேர் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கோடைக்காலத்தில் தினமும் 3 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.

குறிப்பாக கோடைக்கால விடுமுறை நாட்களில் 5000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இதனால் இங்குள்ள படகு இல்லம், பறவைகள் சரணாலயம், செல்பி பார்க் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பலத்த குளிர் காற்றும் வீசி வருகிறது. இதனால் விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும், பணி செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருவதால் ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது; ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் பலத்த குளிர் காற்று: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Elagiri Hills ,Elagiri ,Elagiri hill ,Tirupattur district ,Dinakaran ,
× RELATED தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்