×

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் நாளை மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

The post தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Centre ,
× RELATED வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...