×

கன மழையால் வீடு தரைமட்டம்

 

பந்தலூர், ஜூலை 17: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கனமழை தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பந்தலூரில் 92 மி.மீ மழையும், தேவாலாவில் 84 மி.மீ, சேரங்கோடு பகுதியில் 113 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, நேற்று பெய்த கனமழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட படச்சேரி பகுதியில் உள்ள ருக்மணி சந்திரசேகரன் என்பவரது வீடு இடிந்து முற்றிலும் சேதமானது.

வீட்டில் இருந்த ருக்மணி மற்றும் அவரது மகன்கள் தென் தமிழன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் அதிஷ்டவசமாக வீடு இடிவதை பார்த்து வெளியே ஓடி உயிர் தப்பினர். இதில், வீட்டு உபயோக பொருட்களான தொலைக்காட்சி, பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் சேதமானது. தொடர் மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post கன மழையால் வீடு தரைமட்டம் appeared first on Dinakaran.

Tags : House ,Bandalur ,Bandalur district ,Nilgiri district ,Dewala ,Cherangodu ,
× RELATED விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வலியுறுத்தல்