சிவகங்கை, ஜூலை 17: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணியம்மா, வீரபாண்டி, முத்துராமலிங்கபூபதி, உமாநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூத்த வழக்கறிஞர் ராஜசேகரன், வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் மதி, நிருபன்சக்கரவர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், மெய்யப்பன், தனசேகரன், ஜபருல்லா, சின்னக்கருப்பன், வேங்கையா, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.