கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. மதியம் துவங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஆவணங்கள், தேடி வந்த நபர்களின் நோக்கம், எஸ்டேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகள், பதவியில் இருந்தபோது எஸ்டேட் பங்களாவில் ஆதிக்கம் செலுத்திய நபர்கள் குறித்த பல்வேறு விவரங்களை போலீசார் கேட்டனர். 2 பேரும் அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்தனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.