- தண்டாயர்பேட்டை
- தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம்
- சென்னை மாவட்ட ஆட்சியர்
- அலுவலகம்
- மாநில பொதுச் செயலாளர்
- ஜான்சிராணி
- ஜெயச்சந்திரன்
- வாணி
- நடராஜன்
- தின மலர்
தண்டையார்பேட்டை: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்களை ஒப்படைக்கும் போராட்டம், நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் ஜான்சிராணி தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன், வாணி, நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அப்ேபாது, மாதம்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையை விண்ணப்பித்து 14 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும், வீடு இல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு வழங்க வேண்டும், விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும், என கோஷங்கள் எழுப்பினர். பின்னர், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
The post கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நூதன போராட்டம் appeared first on Dinakaran.