- ஸ்ரீபெரும்புதூர்
- சந்திரசேகர்
- பூந்தண்டலம் பஞ்சாயத்து புதுச்சேரி
- குன்ரத்தூர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- தீபப்ரியா
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் ஊராட்சி புதுச்சேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). கூலித்தொழிலாளியான இவருக்கு, தீபபிரியா (32) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியால் சிரமப்பட்டு வந்த சந்திரசேகர், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கிடையே அறுவை சிகிச்சை செய்து, வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று விட்டில் யாரும் இல்லாதபோது சந்திரசேகர் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற சோமங்கலம் போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.