×

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி

தேவையானவை

சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 15 சிலைஸ்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உப்பு, மஞ்சள்தூள்,
பெருங்காயம் – தேவைக்கு
எண்ணெய் – பொரிப்பதற்கு தகுந்த அளவு.

செய்முறை

முதலில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதன் தோல் சீவி நன்றாக கழுவி உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பஜ்ஜி போல் கட் செய்து வைத்துக் கொள்ளவும். கடலை மாவை மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். ஸ்டவ்வில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மீடியம் ஹீட்டில் வைத்து கிழங்கை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் வறுத்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு மொறு மொறுப்பானதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும். பிரெட் பஜ்ஜி போல் இனிப்புச்சுவையில் மிக அருமையாக இருக்கும் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி.தேங்காய், தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைத்தால் வேற லெவல்!

 

The post சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!