×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,054 கன அடியில் இருந்து 16,577 கன அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணிக்கு 5,054 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 18,577 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடியாக சற்று உயர்வு; நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Matour Dam ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!