×

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ல்பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு

சென்னை: பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2024 ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.07.2024 ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள் / ஆய்வு மாணவர்கள் 10.07.2024 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ல்பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : International Muttamil Murugan Conference 2024-L ,Chennai ,International Muttamil Murugan Conference ,Palani ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. Sekarpapu ,International Muthamil Murugan Conference 2024 ,
× RELATED ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை...