×

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோடீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர் பதவியேற்றுக் கொள்வார்.

உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Krishnakumar ,Chief Justice ,Madras High Court ,Chennai ,President ,Draupadi Murmu ,Madras High Court Acting ,R. Mahadevan ,Jammu and Kashmir High Court ,Kodeeswar Singh ,Supreme Court ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு...