×

மகசூல் அதிகரிக்க டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர்பாஸ்பேட் பயன்படுத்தலாம்: வேளாண் அதிகாரி தகவல்

வேலூர்: மகசூல் அதிகரிக்க டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர்பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சோமு கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 4,124 டன், டிஏபி 824 டன், பொட்டாஷ் 409 டன், கலப்பு உரங்கள் 6024 டன் இருப்பு வைக்கப்பட்டள்ளது.

உரம் கிடைப்பதில் பிரச்சனை, ரசீது இல்லாமல் விற்பனை செய்வது, பிற உரங்கள் வாங்க கட்டாயப்படுத்துவது மற்றும் உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் தெரிவிக்கலாம். மேலும் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டிஏபி மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன.

சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்து பயிர்களில் டிஏபி உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தும் போது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் டிஏபி உரத்திற்கு பதிலாக சூப்பர் பரஸ்பேட் உரத்தை பயன்படுத்தி பயன்பெறலாம். இதற்காக வேலூர் மாவட்டத்தில் 183 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்படுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மகசூல் அதிகரிக்க டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர்பாஸ்பேட் பயன்படுத்தலாம்: வேளாண் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore District ,Joint Director ,Agriculture ,Agriculture Associate Director ,Somu ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்