×

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது.

பெங்களூரு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 23,333 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 500 கனஅடி நீரும் என 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 23,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் 21 செமீ-க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக உடுப்பி, குடகு, ஹாசன் உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது. appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Tamil Nadu ,Kaviri ,Bangalore ,Karnataka ,Kabini Dam, K. R. ,S Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு