×

பூதலூர் ஊராட்சியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

 

வல்லம், ஜூலை 16: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி செல்லம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியிலும் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள செல்லம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நேற்று விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்ட தொடக்கவிழா நடந்தது.

மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி இத்திட்டத்தை ஊராட்சித் தலைவர் ஓ.கே.சுப்பையா தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை சியாமளா, உதவி ஆசிரியர்கள் மனோகரன், அமுதா, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூதலூர் ஊராட்சியில் காலை உணவு திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Boothalur ,panchayat ,Vallam ,Tanjore District Boothalur Panchayat Union Orathur Panchayat Chellam Government Aided Middle School ,Thanjavur District Bootalur Panchayat Union ,Chellam Government Aided Middle School ,Orathur ,Boothalur Panchayat ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் ஊராட்சி குப்பைகளை...