- அங்கன்வாடி
- விருதுநகர்
- சிவகாசி பாடங்குளம் அங்கன்வாடி மையம்
- விருதுநகர் கலெக்டர் அலுவலகம்
- சிவகாசி பட்டான்குளம் அங்கன்வாடி
- தின மலர்
விருதுநகர், ஜூலை 16: அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி அனுப்பன்குளம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், சிவகாசி அனுப்பன்குளம் அங்கன்வாடியில் 35 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். கடந்த 6 வருடங்களாக அங்கன்வாடி மையம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கட்டிடத்தின் தரைத்தளம் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் சிரமத்தில் உள்ளனர். மேலும் ஊராட்சி குப்பை அள்ளும் வண்டிகள் மையத்தின் முன்பகுதியில் நிறுத்தப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடியில் உதவியாளரும் இல்லை. இந்நிலையில் 2021ல் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. புதிய கட்டிடத்தில் மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கைப்பிடி சுவர் இல்லை என்ற காரணங்களால் திறக்கப்படவில்லை. கலெக்டர் தலையிட்டு புதிய கட்டிடத்தில் உள்ள குறைகளை சரி செய்து திறக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post அங்கன்வாடியை திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.