×

விஷம் கொடுத்தும் பிழைத்ததால் கணவரை தலையணையால் அழுத்தி கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் கைது

கோவை: கோவையில் விஷம் கொடுத்தும் பிழைத்த கணவரை தலையணையால் அழுத்தி கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். கோவை வடவள்ளி அருகே காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு (40). லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (33). 2 மகன்கள் உள்ளனர். லாவண்யா மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக பிரபு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் டிபன் கடையில் இருந்து லாவண்யா வீட்டிற்கு வந்தார். பின்னர் பிரபு மயங்கிய நிலையில் கிடப்பதாக மாமியாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது பிரபு இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. புகாரின்படி வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரபுவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து லாவண்யா கொலை செய்தது தெரியவந்தது. லாவண்யாவின் டிபன் கடைக்கு அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா (39) அடிக்கடி வந்து சாப்பிடுவார்.

அப்போது அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுதெரிந்து பிரபு கண்டித்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கணவருக்கு லாவண்யா கொடுத்தார். அதில் பிரபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த பிரபு வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி மீண்டும் திட்டம் தீட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர் படுத்திருந்த பிரபுவின் கழுத்தை டவலால் இறுக்கினார். அவர் சத்தம்போடவே லாவண்யா கணவரின் முகத்தை தலையணையால் அழுத்திப்பிடித்தார். இதில் பிரபு துடிதுடித்து இறந்ததும், கள்ளக்காதலனை தப்பி ஓடச்செய்துவிட்டு, லாவண்யா நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்ததது. இதையடுத்து லாவண்யாவையும், பைரே கவுடாவையும் போலீசார் கைது செய்தனர்.

The post விஷம் கொடுத்தும் பிழைத்ததால் கணவரை தலையணையால் அழுத்தி கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Prabhu ,Kalapanayakanpalayam ,Vadavalli, Coimbatore ,Lathe Work Shop ,Lavanya ,Dinakaran ,
× RELATED வைரலான ஜாலியோ ஜிம்கானா டிரெய்லர்