×

அமைப்புசாரா நலவாரியத்தில் ஓய்வூதியர்கள் மனு நிராகரிப்பு

சேலம், ஜூலை 16: ஜெய் ஜவான், ஜெய் கிஸான் மஸ்தூர் பெடரேசன் மற்றும் கட்டுமானம், அமைப்புசாரா தொழிற்சங்கங்கள், பல்வேறு கூட்டு அமைப்புகள் இணைந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தங்கவேலு, நாகராஜன் தனராஜ், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் காமலாபுரம் விமான நிலைத்திற்கு முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பெயரை சூட்ட வேண்டும். சேலம் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா நல வாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்யும் ஓய்வூதியர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி அலைக்கழிக்கின்றனர். இதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். சேலம் மாநகர பகுதியில் ஓட்டல், பேக்கரிகள், டீக்கடைகள், ரெஸ்டாரண்டுகளில் சேரும் குப்பைக்கழிவுகள் தெருக்களிலும், பொது இடங்களிலும் கொட்டப்படுகிறது. இதை சுகாதார அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டீக்கடை, சில்லி சிக்கன்கடை, பேக்கரி கடைகள் போன்ற உணவு சம்பந்தமான சென்று முறையான ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post அமைப்புசாரா நலவாரியத்தில் ஓய்வூதியர்கள் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Welfare Board ,Salem ,Jai ,Jai Kisan Mastur Federation ,Construction ,Non-Organized Trade Unions ,State President ,Arumugam ,Thangavelu ,Non-Organized Welfare Board ,Dinakaran ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் சார்பில்...