வேடசந்தூர், ஜூலை 16: வேடசந்தூர் அருகேயுள்ள அய்யர்மடத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (40). இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அவருடன் 5 ஆண்டுகள் வாழ்ந்த தனலட்சுமி, கணவரை விட்டு பிரிந்து தாய் வீடான அய்யர்மடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அங்கு வாடகை வீட்டில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே தனலட்சுமியின் நடத்தை மீது மனோஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் மாலை வீட்டில் விஷ விதையை அரைத்து தின்று மயங்கி கிடந்தார். இதை பார்த்த மனோஜ்குமார் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, தனலட்சுமி இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் எஸ்ஐ அழகர்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.
