×

தமிழ்நாட்டில் ஜுலை மாதம் முதல் மின்கட்டணத்தை 4.83% உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஜுலை மாதம் முதல் மின் கட்டணம், 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கடந்த 2022 செப்., 10ல் மின் கட்டணம், 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை மாதம் முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு
401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு
501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு
601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு
801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஜுலை மாதம் முதல் மின்கட்டணத்தை 4.83% உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electricity Regulatory Commission ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Electricity Board ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை...