×

நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும் வரைஓயப்போவதிலை : ராகுல் காந்தி தடாலடி

டெல்லி : நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும்வரை தாம் ஓயப்போவதிலை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமது சமூக வலைதள பதிவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பது தமக்கு வெறும் பதவி மட்டும் அல்ல என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பினரை சந்தித்தது உள்ளிட்ட காட்சி பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். மக்களவையில் உறுப்பினராக பதவியேற்றது இம்மாதம் 1ம் தேதி அவையில் பேசியது உள்ளிட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. மக்கள் பிரச்சனைகளை அறிந்து நாடாளுமன்றத்தில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் குரல் எழுப்புவதே தமது கடமை என்று அந்த பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்கள் தங்களுக்கான உரிமைகளையும் நீதியையும் பெறும் வரை தாம் ஓயப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடியது, உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தது, இந்திய ரயில்வே எஞ்சின் ஓட்டுநர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தியது. மணிப்பூர் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது ஆகிய காட்சிகளையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

The post நாட்டு மக்களுக்கு உரிமைகளும் நீதியும் கிடைக்கும் வரைஓயப்போவதிலை : ராகுல் காந்தி தடாலடி appeared first on Dinakaran.

Tags : Rakul Gandhi ,Dadaladi ,Delhi ,Rahul Gandhi ,
× RELATED சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்..!!