- விக்ரவாண்டி
- Jawahirullah
- சென்னை
- மனிதநேய மக்கள் தலைவர்
- கட்சி
- பேராசிரியர்
- MH
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுக
- விக்கிரவாண்டி
- தின மலர்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி மூன்றரை ஆண்டு கால திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த இடைத்தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டனர். தவறான பரப்புரைகளையும் அவதூறுகளையும் பேசி வந்தனர். அவற்றையெல்லாம் மக்கள் புறந்தள்ளி வரலாற்று வெற்றியை இந்தியா கூட்டணிக்கு வழங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றி இருப்பது ஒன்றிய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விடயமாகும். விக்கிரவாண்டி வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், களப்பணி ஆற்றிய இந்தியா கூட்டணியின் அத்துணை தோழமைக் கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்துள்ளனர்: ஜவாஹிருல்லா கருத்து appeared first on Dinakaran.