×

இடைத்தேர்தல் வெற்றி வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும், தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலைகளை காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் 2 நாட்கள் தீவிர பிரசாரம் செய்தார். இது, வெற்றிக்கு காரணமாக அமைந்தது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கிடைத்த இந்த வெற்றி, வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் இந்த வெற்றி பிரதிபலிக்கும்.

The post இடைத்தேர்தல் வெற்றி வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : 2026 assembly elections ,Minister ,Ponmudi ,Chennai ,Vikravandi ,DMK ,Deputy General Secretary ,Tamil Nadu ,Higher Education ,K. Ponmudi ,Anna Institute ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில்...