- ஓய்வூதியம் சங்கம்
- நிலக்கோட்டை
- 8வது வட்ட சபை
- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்
- அம்மாவாசை
- தமிழ்செல்வி
- ராஜம்மல்
- சித்திரைக்கலை
- வட்டக்லை…
- நிலக்கோட்டை ஓய்வூதியர்கள்
- சங்கம்
- சபை
- தின மலர்
நிலக்கோட்டை, ஜூலை 14: நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 8வது வட்ட பேரவை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் அம்மாவாசை தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் தமிழ்செல்வி, ராஜம்மாள், சித்திரைகலை முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை துணை தலைவர் ஜெயராமன் வரவேற்றார், மாவட்ட செயலாளர் கேசவன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும்,
70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை தலைவர் ஜெயமணி, வட்டக்கிளை செயலாளர் பிச்சையம்மாள், மாவட்ட இணை செயலாளர் லூர்து மரியபுஷ்பம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, துணை தலைவர் ஜெயக்கொடி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியம், தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தணிக்கையாளர் ராஜகோபாலன் நன்றி கூறினார்.
The post நிலக்கோட்டையில் ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.