- முகேஷ் அம்பானி
- ஆனந்த்-ரத்திகா
- அமிதாப்
- ஷாரு கான்
- மும்பை
- ஆனந்த் அம்பானி
- ராதிகா வியாபாரி
- அமிதாப் பச்சன்
- முகேஷ்
- தின மலர்
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் புதுமண தம்பதிக்கு ஆசி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது இளம் வயது காதலி ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
திருமணத்தை ஒட்டி பல மாதங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், திருமண வைபோக விழாக்கள் 3 நாள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு ஆசி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல, நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் சஞ்சய் தத், மாதுரி தீட்சித், அவரது கணவர் ஸ்ரீராம் நேனே, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகைகள் ஹேமா மாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, திரைப்பட இயக்குநர் அட்லீ, அவரது மனைவி கிருஷ்ண பிரியா, தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று பிரமாண்டமான ரிசப்ஷனுடன் ஆனந்த் அம்பானி, ராதிகாவின் திருமண கோலாகல விழாக்கள் நிறைவு பெறுகின்றன.
The post முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் ஆனந்த்-ராதிகா தம்பதிக்கு ஆசி வழங்கிய பிரபலங்கள்: அமிதாப், ஷாருக்கான் குடும்பத்துடன் பங்கேற்றனர் appeared first on Dinakaran.