- பொதுப்பணித் துறை
- சென்னை
- பொது பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகத் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை செர்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் உபயோகிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த 2024-25 ஆம் ஆண்டிற்குரிய பொதுப்பணித்துறை “பொதுவான செந்தர விலை விவர பட்டியல்“(Common Schedule of Rates), இன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, கட்டுமானப் பொருட்களுக்கான செந்தர விலை விவரப் பட்டியலானது, பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, இதர அரசுத் துறைகளில், தேவையான சிறப்பு இனங்களுக்கான விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு, முதல் முறையாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத் துறைகள் உபயோகிக்கும் வகையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த செந்தர விலை விவரப் படடியல் தயாரிக்கும்படி, முதலமைச்சர் பொதுப்பணித்துறைக்கு ஆணையிட்டார்கள். அதன்படி கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட “செந்தர விலை விவரப் பட்டியல் குழு“ அமைத்து, 14.3.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
1. முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) பொதுப்பணித்துறை.
2. முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) நீர்வளத்துறை.
3. முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
4. முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், வனத்துறை.
5. துணைச் செயலாளர் (வரவு & செலவு), நிதித்துறை.
6. பொறியியல் இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.
7. பொறியியல் இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம்.
8. தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நெடுஞ்சாலைத்துறை.
9. தலைமைப் பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமானம், நீர்வளத்துறை,
10. தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்.
11. தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இக்குழுவின் உறுப்பினர்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் இதர இனங்களின் விலைகள் குறித்து (சந்தை விலை, மொத்த விற்பனை விலைக் குறியீடு(WPI). கடந்த 5 ஆண்டுகளுக்கான தகவல்கள் போன்ற பல்வேறு தரவுகளின் (Factors) அடிப்படையில் விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த “செந்தர விலைவிவரப் பட்டியல்“ 15.7.2024 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) கே.பி.சத்தியமூர்த்தி, நிதித்துறை துணைச் செயலாளர்(வரவு&செலவு) பிரதிக் தயாள், மற்றும் பிற துறைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் அடங்கிய குழுக் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
The post 2024-25 ஆம் ஆண்டிற்குரிய பொதுப்பணித்துறை “பொதுவான செந்தர விலை விவர பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.