- உத்தரமரூர்
- மாரியம்மன் கோவில்
- கும்பாபிஷேகம்
- Kolakalam
- உத்தரமூர்
- உத்தரமூர் பஜார் சாலை
- ஸ்ரீ நத்தேரு மாரியம்மன் கோயில்
- கும்பபிஷேக்
- உத்தரமூர் மாரியம்மன் கோயில்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி ஸ்ரீ நடுத்தெரு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சில மாதங்களாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த பணிகள் அனைத்தும் அண்மையில் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து நேற்று மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள், வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
The post உத்திரமேரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.