×
Saravana Stores

500 மரவிதைகளை நடவு செய்து காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு

கம்பம் : காந்திகிராம பல்கலைக்கழக நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை மாணவர்கள் அன்புநிதி, ஜெகதீஸ், விவேகானந்தன், மனோ, ஹரிஹரன் ஆகியோர் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டியில் 500 மரவிதைகளை நடவு செய்தனர்.

பனைமரம் நடும் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ராமசாமி நாயக்கன்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் மாணவர்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் மரபு விளையாட்டுகளை விளையாட பயிற்சி அளித்தனர். உணவே மருந்து, புத்தக வாசிப்பு கல்வியின் நோக்கம், நேர மேலாண்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post 500 மரவிதைகளை நடவு செய்து காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Gandhigram University ,Gampam ,Anbunidhi ,Jagathees ,Vivekanandan ,Mano ,Hariharan ,Ramasaminayakanpatti ,Uthampalayam ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் பகுதிகளில் 2ம் போகத்திற்கு புது நெல்லு, புது நாத்து தயார்…