×

முதல் போகத்திற்காக சின்னமனூரில் நெல் நடவு பணி தீவிரம்

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் முதல் போகத்திற்கான நெல் நடவு துவ ங்கி வளர்த்தெடுத்த நெல் நாற்றுக்களை பறித்து நடவுப் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் பெரியாறு தேக்கடி அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாசன நீர் கடந்த 30 நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.

பெரியாற்றிலிருந்து வழிநெடுக ஒவ்வொரு ஊர்களிலும் பெரிய, சிறிய மற்றும் கிளை வாய்க்காலிலும் பாசன நீர் திருப்பி விடப்பட்டு ஆங்காங்கே ஒவ்வொரு ஊர்களையும் கடந்து தேனி அருகே உள்ள பிசி பட்டி வரையில் வயல்வெளிகள் உட்பட கண்மாய்கள், குளங்களில் சென்று சேர்ந்து வருகிறது.இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் 4000 ஏக்கர்களில் வேம்படிக்களம், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம் பிரிவு, பெருமாள்கோயில் பரவு, சிவகாமியம்மன் கோயில் பரவு, உடையகுளம் பரவு, கருங்கட்டாங்குளம் பரவு, செங்குளம் பரவு, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 25 நாட்களில் வளர்த்தெடுத்த நெல் நாற்றுக்களை பறித்து கடந்த 15 நாட்களாக நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு மாதம் கோடை காலத்தில் வயல்வெளிகள் மற்றும் சாலைப் பகுதிகள் யாவும் வறண்டு கிடந்த நிலையில், தற்போது நடவு பணிகள் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாற்று நடுவதில் நடவில் மும்முரம் காட்டியுள்ளனர். வேகத்தில் நடைபெறும் நடவு பணிகள் யாவும் இம்மாதம் ஜூலை மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post முதல் போகத்திற்காக சின்னமனூரில் நெல் நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Periyar ,Gampam valley ,Theni district ,Dinakaran ,
× RELATED பெரியாறு அணை உரிமையை தமிழக அரசு...