×

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

 

துறையூர், ஜூலை 13: துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூரில் பெரிய ஏரிக்கரைக்கு மேற்கேயுள்ள மூங்கில் தெப்பக்குளம் காசி விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி ஜூலை 7 முதல் கோவில் அருகே அமைக்கப்பட்ட தனிக்குடிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமங்கள், பூஜைகளை 52 சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை ஓதிச் செய்தனர்.

இதையடுத்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், மாலை சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனையும், இரவு சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. இந்த விழாவில் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மட்டுமின்றி பல மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். உபயதாரர்கள் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேணுகோபால் செய்திருந்தார்.

The post துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Thuraiur Bamboo Theppakulam Kasi Viswanathar Sivan Temple Kumbabishekam ,Kumbapisheka ceremony ,Kasi Viswanathar Sivan Temple ,Thuraiur Bamboo Theppakulam ,Bamboo Thapakulam Kashi Visaladhi Ambika Sameda ,Trichy ,Thuraiur Bamboo ,Theppakulam Kasi Vishwanathar ,Sivan Temple ,Kumbapishekam ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே உள்ள 25 அடி உயர...