×

சில்லி பாயின்ட்…

* உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய தேசிய சாம்பியன் அனஹத் சிங் (16), உன்னதி திரிபாதி, சமீனா ரியாஸ், டினா பராஸ்ராம்புரியா, சேஹர் நாயர் ஆகியோர் மகளிர் பிரிவில் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் சவுரியா பாவா, யுவராஜ் வதவானி, அயான் வசிரல்லி, அரிஹந்த், அவ்லோகித் சிங், தன்வீத் சிங் ஆகியோர் விளையாட உள்ளனர்.

* தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில்நடந்த நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக திருமாறன் (திருநெல்வேலி) தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சந்திரசேகரன், பொருளாளராக முரளிதரன் ஆகியோர் மீண்டும் தேர்வாகினர். இணைச் செயலாளர்களாக கண்ணன் (மதுரை), இளங்கோவன் (சென்னை) உட்பட அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

* அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள ஜிம்பாப்வே அணி விவரம்: கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனாதன் கேம்பெல், டெண்டாய் சதாரா, டனகா சிவாங்கா, ஜாய்லார்ட் கம்பி (கீப்பர்), ராய் கயா, கிளைவ் மடாண்டே (கீப்பர்), வெலிங்டன் மசகட்சா, பிரின்ஸ் மஸ்வாரே, பிளெஸ்ஸிங் முஸரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் என்காரவா, விக்டர் நியாவுசி, ஷான் வில்லியம்ஸ்.

* ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஸ்டேடியம், அதிநவீன வசதிகளுடன் உள்ளரங்கு டெஸ்ட் போட்டிகளை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியம் 2028ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : World Junior Squash Championship ,Houston, USA ,Anahat Singh ,Unnati Tripathi ,Samina Riaz ,Tina Parasramburia ,Shehar Nair ,Dinakaran ,
× RELATED முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா