மதுரை: கடந்த மே 15ம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் வாசன் சென்றபோது, மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்விதமாக செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியதாக 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வாசனின் தாயார் சுஜாதா, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை தங்களிடம் ஒப்படைக்க கோரி மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்புலெட்சுமி, குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர், தனது காரை மீண்டும் பயன்படுத்தினால் அதேபோன்ற குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பு உள்ளது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
The post யூடியூபர் வாசனின் காரை ஒப்படைக்க கோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.