- காந்தி
- ராகுல் காந்தி
- மும்பை உயர் நீதிமன்றம்
- புது தில்லி
- ராஜேஷ் குந்தே
- ஆர்எஸ்எஸ்
- மகாராஷ்டிரா
- பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
- மகாத்மா காந்தி
புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என கூறியதாக மகாராஷ்டிராவின் பிவந்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்தே என்பவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுகொள்வதாக தெரிவித்திருந்தது.மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
The post காந்தி படுகொலை தொடர்பான பேச்சு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.