மதுரை, ஜூலை 13: மதுரை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட அப்பன் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள், தற்போது வெண்டைக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வெண்டை விளைச்சல் அமோகமாக உள்ளதால், இங்கு பறிக்கும் வெண்டைக்காய்களை 20 முதல் 25 கிலோ வரை பேக்கிங் செய்து மதுரை மார்கெட் மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தினசரி அனுப்பி வைக்கின்றனர். வெண்டைக்காய் பறிக்கும் போது கை அரிக்கும் என்பதால், தொழிலாளர்கள் கைகளுக்கு உறை போட்டுக்கொள்கின்றனர். விலையில் சரிவு கண்ட வெண்டாய்க்காய் மெதுவாக அதிகரித்து கிலோ ரூ.40 முதல் 50 வரை தற்போது விற்பனை ஆகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அப்பன் திருப்பதி பகுதியில் வெண்டை சாகுபடி அமோகம் appeared first on Dinakaran.