- துட்டிகோர்ன் மாநகராட்சி கழகம்
- தூத்துக்குடி
- ஆணையாளர்
- மதுபாலன்
- தூத்துக்குடி மாநகராட்சி கழகம்
- Vallanadu
- காளியாவூர்
தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுதினம் (15ம் தேதி) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் ஆணையாளர் மதுபாலன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை மறுதினம் (15ம்தேதி) திங்கட்கிழமை நடக்கிறது. இதன் காரணமாக 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. இத்தகவலை தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுதினம் குடிநீர் விநியோகம் கட் appeared first on Dinakaran.