×
Saravana Stores

கார் மோதியதில் தொழிலாளி பலி

தர்மபுரி, ஜூலை 13:மொரப்பூர் மடதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (49). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (46). நேற்று முன்தினம் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம் டூவீலரில் போடிநாயக்கன்பட்டிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சுங்கல்பாடி அருகே சென்றபோது, எதிரே வந்த கார், அவர்களின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் மற்றும் கற்பகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். கற்பகத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மோதியதில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Mahendran ,Morapur Madaloli village ,Kadakam ,MUNDINAM MAHENDRAN ,BODINAYAKANPATTI ,KAPAGAM DUWHEELER ,Sungalpadi ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...