×

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் 24350, நடுநிலைப் பள்ளிகள் 6976, உயர்நிலைப் பள்ளிகள் 3094, மேனிலைப் பள்ளிகள் 3156 என மொத்தம் 37 ஆயிரத்து 576 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 5 ஆயிரத்துக்கும் மேல் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தொடங்க வேண்டிய இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கோடை வெயில் மற்றும் வெப்பம் காரணமாகவும், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டது, நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்டது என பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டு திறக்கப்பட்டன.

இதையடுத்து, காலதாமதமான நாட்களை ஈடுகட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதன்படி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இரண்டாம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் சனிக்கிழமையான இன்று(13ம் தேதி)அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...