- இலங்கை கடற்படை
- Mutharasan
- யூனியன் அரசு
- சென்னை
- இலங்கை கடற்படை
- புதுக்கோட்டை மாவட்டம்
- கோட்டா பட்டினம்
- Jagadapattinam
- தின மலர்
சென்னை: இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9ம் தேதி மீனவர்கள் 176 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே வந்து கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகுகள் உள்பட 13 மீனவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது மீன்பிடி உரிமையை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களை வஞ்சித்து வருவதை கண்டிப்பதுடன், இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டு கொண்டு வர ஒன்றிய அரசும், அயலுறவுத் துறை அமைச்சகமும் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.