×

நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என திருமாவளவன் பேட்டி

சென்னை: நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களையும் வலியுறுத்த கோரிக்கை வைத்துளோம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துகளை முதலமைச்சர் ஸ்டாலினுடன் பகிர்ந்துகொண்டேன் எனவும் பேட்டி அளித்துள்ளார்.

The post நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : MRUMALAVAN ,Chennai ,Chief Minister ,Thirumaalavan ,ministers ,India ,Armstrong ,Thirumavalavan ,Dinakaran ,
× RELATED தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி...