×

பெரம்பலூரில் எஸ்பி ஷ்யாம்ளா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: 52 மனுக்கள் பெறப்பட்டது

பெரம்பலூர், ஜூலை 12: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலநதுகொண்ட பொதுமக்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை எஸ்பி பெற்றார். முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன், டிஎஸ்பிக்கள் (பெரம்பலூர் உட்கோட்டம்- பொறுப்பு) வளவன், (மங்க லமேடு உட்கோட்டம்) தனசேகரன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், பாடாலூர், அரும்பாவூர், மங்களமேடு, வி.களத்தூர், கை.களத்தூர், மருவத்தூர், மாவட்ட மதுவிலக்கு பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள் ளிட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப்பிரிவுகாவல் துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மனுமுகாம் மூலம் 52 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல் துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post பெரம்பலூரில் எஸ்பி ஷ்யாம்ளா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: 52 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Camp ,SP ,Shyamla ,Perambalur ,Perambalur district SP ,Shyamla Devi ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ்...