×
Saravana Stores

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு

விருதுநகர், ஜூலை 12: விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாக கிழக்கு நுழைவு வாயில் அருகே வடமாநில இளைஞர் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டது. இதுகுறித்து அல்லம்பட்டி விஏஓ சாவித்திரி அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்து கிடந்தவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.

இதன்படி அவர் உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், பிலகுனியா கிராமத்தை சேர்ந்த துர்கேஷ்குமார்(37) என தெரியவந்தது. இவர், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் அவர் படுத்திருந்த நிலையில் உடல்நல குறைவால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமாநில வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : North State ,Virudhunagar ,Virudhunagar Government Medical College Hospital ,Allambatti ,VAO ,Savitri ,Dinakaran ,
× RELATED பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை