சிவகங்கை, ஜூலை 12: காங்கிரஸ் சிவகங்கை மாவட்ட கமிட்டி உறுப்பினர் முரளிதரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மும்பையை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை 99ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்த நிலையில் ஒப்பந்தம் 2026ம் ஆண்டு முடிவடைகிறது. இதனால் அங்குநான்கு தலைமுறையாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை நிறுவனத்தினர் விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்றி வருகின்றனர்.
வேறு தொழில் தெரியாத பட்டியலினத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாஞ்சோலை மற்றும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னோர்கள் பணி செய்த நிலையில் தற்போது அவர்களின் வாரிசுகள் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.