×

குடிப்பதை நிறுத்தினால் மதுவிலக்கு சாத்தியமாகும்: துரை வைகோ எம்பி பேட்டி


சங்கரன்கோவில்: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் துரை வைகோ அளித்த பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழப்பார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு 10 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஒன்றிய அரசின் குற்றவியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுகவுடன் இணைந்து இதற்காக போராடுவோம். பூரண மதுவிலக்கிற்கும், விஷ சாராய மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை. குடிப்பவர்கள் தங்கள் மனதை மாற்றி குடிப்பதை நிறுத்தினால் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும். பூரண மதுவிலக்கு என்பதில் மதிமுக உறுதியுடன் இருக்கிறது.
இவவாறு அவர் கூறினார்.

 

The post குடிப்பதை நிறுத்தினால் மதுவிலக்கு சாத்தியமாகும்: துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,SANGARANKOVILLE ,Akumthukone ,MDMK ,General Secretary ,Sankarankovil Assembly ,Vikravandi ,
× RELATED சமஸ்கிருதம், இந்தியை திணிக்க கூடாது;...