×
Saravana Stores

அண்ணாமலை வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பனையூர் பேருந்து நிறுத்தம் முன்பாக தமிழக காங்கிரஸ் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாமலைக்கு எதிரான பதாகைகளை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பனையூரில் அண்ணாமலை இல்லத்திற்கு முன்பாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அடையாறு துரை, அண்ணாமலை அரசியலுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு கட்சியையும், ஒவ்வொரு மாநில தலைவரையும் குறை சொல்லிக்கொண்டு அரசியல் செய்கிறார். அவர் ஒரு நாகரிகமான அரசியல்வாதி கிடையாது என்றார்.

The post அண்ணாமலை வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,CHENNAI ,Congress ,Tamil Nadu Congress Committee ,President ,Selvapperunthagai ,BJP ,Tamil Nadu Congress ,Panaiyur ,Annamalai house ,
× RELATED மந்த கதியில் நடைபெற்று வரும்...