சென்னை: அழகு முத்துக்கோன் வீரம் அணையா நெருப்பாய் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அன்னாரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்தநாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று. அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
The post அழகு முத்துக்கோன் வீரம் அணையா நெருப்பாய் தமிழர் நெஞ்சங்களில் என்றும் சுடர்விடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.