×
Saravana Stores

தூத்துக்குடியில் `டிசி’ வாங்க சென்ற மாணவர் விபத்தில் பரிதாப பலி

ஸ்பிக்நகர், ஜூலை 12: தூத்துக்குடி கல்லூரியில் டிசி வாங்க சென்ற மாணவர், விபத்தில் சிக்கி பலியானார். ஏரல் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் ராம்குமார்(19), தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். ஆனால் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு டிசி பெறச் சென்றார். பின்னர் தனது நண்பரிடம் பைக்கை வாங்கிக் கொண்டு முள்ளக்காடு பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அங்கிருந்து மீண்டும் கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினிலாரி, பைக் மீது மோதியது. இதில் மாணவர் ராம்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முத்தையாபுரம் எஸ்ஐ முத்தமிழ் அரசன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

The post தூத்துக்குடியில் `டிசி’ வாங்க சென்ற மாணவர் விபத்தில் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Spignagar ,Tuticorin College ,Anandaraj ,Ramkumar ,Kottarakurichi ,Arel ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை