×

கட்டண சலுகையில் பதிவுகள்

குமாரபாளையம், ஜூலை 12: மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வருவாய்துறை சார்ந்த சான்றிதழ்களுக்கு, இ-சேவை மையத்தில் 50 சதவீதம் கட்டண சலுவை அளிக்கப்படுகிறது என தாசில்தார் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற இ- சேவை மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில் பொதுமக்கள் வருமானச் சான்று, சாதி சான்று, கல்வி சான்றிதழ் தொலைந்தமைக்கான சான்று, ஆதரவற்ற, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று, இருப்பிடச் சான்று, கலப்பு திருமண சான்று, வேலையில்லாதோர் சான்று, சொத்து மதிப்பு சான்று, பட்டா மாறுதல், விதவை சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விண்ணப்பம் செய்யலாம். இதற்கான சேவை கட்டணம் ₹60ல் இருந்து ₹30 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தாசில்தார் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.

The post கட்டண சலுகையில் பதிவுகள் appeared first on Dinakaran.

Tags : Kumarapaliam ,Dasildar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...