- ஸ்மார்ட் ஈரானி
- அமேதி
- புது தில்லி
- முன்னாள் மத்திய அமைச்சர்
- ராகுல் காந்தி
- அமேதி மக்களவை
- உத்திரப்பிரதேசம்
- மத்திய அமைச்சர்…
புதுடெல்லி: அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததால் அரசு பங்களாவை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி காலி செய்தார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. ஒன்றிய அமைச்சராகவும் அவர் இருந்து வந்தார். ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிதி இரானி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரிலால் சர்மாவிடம் அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதையடுத்து ஒன்றிய அமைச்சராக இருந்த போது அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை தற்போது ஸ்மிருதி இரானி காலி செய்துள்ளார். டெல்லி லுட்யென்ஸில் உள்ள 28 துக்ளக் கிரசென்ட்டில் ஸ்மிருதி இரானிக்கு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த பங்களாவை இந்த வார தொடக்கத்தில் ஸ்மிருதி இரானி காலி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் தங்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இதன் அடிப்படையில் ஸ்மிருதி இரானி அரசு பங்களாவை காலி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post அமேதி தொகுதியில் தோல்வி அரசு பங்களாவை காலி செய்தார் ஸ்மிருதி இரானி appeared first on Dinakaran.